இந்தப் படத்தை லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஈழத்தைச் சேர்ந்த ,சுபாஷ்கரனும், இலங்கை அதிபர் ராஜட்சவின் மகனும் இணைந்து தொழில் செய்து வருவதாக செய்திகள் வருகின்றன.இனப்படுகொலை குற்றவாளி ராஜபட்சவோடு தொழில் ரீதியாக நட்புறவு கொண்டுள்ள சுபாஷ்கரன், தமிழ்த் திரையுலகில் முதலீடு செய்வது தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகின் மூலம் தமிழக அரசியலில் ஊடுருவ ராஜபட்ச முயற்சிப்பதாகவும், தமிழகத்தில் இளம் தலைமுறையினர் சிங்கள இனவெறிக்கு எதிராக அணி திரண்டு விடக் கூடாது என்பதற்காகவும் இதுபோன்ற முயற்சிகள் நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கத்தி திரைப்படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிடக் கூடாது. இது நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை ஆகாது. இது தமிழின விரோதி ராஜபட்சவுக்கு எதிரான கோரிக்கை என்பதை புரிந்து கொண்டு திரைப்பட வெளியீட்டாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி