செய்திகள்,திரையுலகம் ஒரேநாளில் 9 லட்சம் பேர் பார்த்த செல்பி புள்ள பாடல் டீசர்!…

ஒரேநாளில் 9 லட்சம் பேர் பார்த்த செல்பி புள்ள பாடல் டீசர்!…

ஒரேநாளில் 9 லட்சம் பேர் பார்த்த செல்பி புள்ள பாடல் டீசர்!… post thumbnail image
சென்னை:-விஜய்-சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்சன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. தீபாவளிக்கு வெளிவர தயாராக இருக்கும் இப்படத்தின் பாடல் டீசர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ‘ஆத்தி’ பாடல் டீசர் ஒருநாளிலேயே 7 லட்சும் பார்வையாளர்களை தொட்டது.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது சொந்தக்குரலில் பாடிய ‘செல்ஃபி புள்ள’ பாடலின் டீசர் வெளியிடப்பட்டது. பிரம்மாண்ட அரங்கில், விஜய்-சமந்தா ஆடிப்பாடிய இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒருநாளில் மட்டும் இந்த பாடல் டீசரை 9 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி