இதையடுத்து மாமா சவுகானிடம் சென்ற அப்பெண் தனது தந்தை பற்றி கூறியிருக்கிறார். இதற்கு மந்திரவாதி தன்னிடம் அதி தீவிர சக்தி உள்ளது என்றும், அதைக்கொண்டு அப்பெண்ணின் தந்தையை கண்டுபிடித்து தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு தான் சொல்வதை கேட்டு அப்பெண் நடக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்த மந்திரவாதி தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூற அவரது இரு மனைவிகளும் அவரது ஆசைக்கு இணங்குமாறு அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு நாட்கள் அப்பெண்ணை அடைத்து வைத்த மந்திரவாதி அவரை மீண்டும் மீண்டும் கற்பழித்துள்ளான். இதற்கு அவனது மனைவிகள் உடந்தையாக இருந்ததுடன் இதைப் பற்றி வெளியில் சொன்னாலோ, போலீசில் சொன்னாலோ அப்பெண்ணை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பித்த அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதியானதால் காவல்துறையினர் மாமாவையும் அவரது இரு மனைவிகளையும் கைது செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி