அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அமெரிக்க மக்கள் எபோலா வைரஸ் நோய் கண்டு அலற வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்!…

அமெரிக்க மக்கள் எபோலா வைரஸ் நோய் கண்டு அலற வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்!…

அமெரிக்க மக்கள் எபோலா வைரஸ் நோய் கண்டு அலற வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்!… post thumbnail image
வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 4 ஆயிரத்து 500 பேரை பலிகொண்டுள்ள எபோலா வைரஸ் நோய், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. அங்கு 3 பேரை ஏற்கனவே இந்த நோய் தாக்கி உள்ளது. ஏறத்தாழ 100 பேர் எபோலா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் நோயை ஒபாமா நிர்வாகம், கையாண்டு வரும் விதம், விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஒபாமா உரை ஆற்றினார். அப்போது அவர், மேற்கு ஆப்பிரிக்க மக்களின் அமெரிக்க பயணத்துக்கு தடை விதிக்கும் யோசனையை ஏற்பதற்கில்லை. இப்படி உலகின் ஒரு மொத்த பகுதிக்கே சீல் வைக்க முற்படுவது, நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும். வைரஸ் நோய் கண்டு யாரும் மனநோயுக்கு ஆளாகவும் தேவையில்லை. அச்சம் அடையவும் வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி