ஆனால் அவன் உடைகள் மட்டும் அங்கு இருக்கின்றன. இதேபோல் அந்த ஷாப்பிங் மாலில் மேலும் சிலர் காணாமல் போகிறார்கள். இதனால் மக்கள் பதட்டம் அடைகிறார்கள். இந்த பதட்டத்துடன் மக்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்ல, விபத்துகளும் வழிப்பறி, கொள்ளைகளும் நடைபெறுகின்றன. இதே நேரத்தில் விமானம் சென்று கொண்டிருக்கும் போதும் பயணிகளில் சிலர் நடுவானில் காணாமல் போகிறார்கள். நிக்கோலசுடன் விமானத்தை ஓட்டும் விமானியும் காணாமல் போகிறார். இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அனைத்தும் அவரவர் இடத்தில் இருந்தன. இந்த வினோதத்தைப் பார்த்த பயணிகள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியடைகிறார்கள். இதனால் விமானத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. நிக்கோலஸ் விமான நிலையத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால், சிக்னல் கிடைக்காததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆதலால் விமானத்தை லண்டனுக்கு கொண்டு செல்லாமல் நியூயார்க்கிற்கே திருப்புகிறார். பிறகு விமான நிலையத்தில் சிக்னல் கிடைக்க, விமானத்தில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றதை கூறுகிறார். அதற்கு அவர்கள் விமானம் மட்டுமில்லாது உலகம் முழுவதும் இதே போல் பலர் மர்மமான முறையில் காணாமல் போயிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். மேலும் விமான தளத்தில் விமானத்தை தரையிறக்க ரன்வே இல்லை என்றும் கூறுகிறார்கள்.
பிறகு தன்னை நம்பி இருக்கும் பயணிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறார் நிக்கோலஸ். இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, எதிரே வந்த ஒரு விமானம் அவரது விமானம் மீது மோதி விடுகிறது. இதனால் விமானத்தின் இறக்கை சேதம் அடைகிறது.ஆபத்தான இந்த சூழ்நிலையில், விமான தளம் இல்லாத சூழ்நிலையிலும் விமானத்தை பத்திரமாக தரையிறக்கி பயணிகள் உயிரை காப்பாற்றுவதுதான் மீதிக்கதை.படத்தில் நிக்கோலஸ் பொறுப்பான விமானியாகவும், பொறுப்பான அப்பாவாகவும் நடித்திருக்கிறார். குறிப்பாக பயணிகளை காப்பாற்ற முயற்சி செய்வதும், அதற்காக வருந்துவதுமாக சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய மகளாக நடித்திருக்கும் கேசி தாம்சன் அழகாக வந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரும் அப்பாவிற்காக ஏங்கும் காட்சிகளிலும், மக்கள் இறந்ததற்கு வருந்தும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.படத்திற்கு கூடுதல் பலமாக பின்னணி இசையும், விஷுவல் எபெக்ட்டும் அமைந்திருக்கிறது. விமானத்தை வானில் காட்டும் காட்சிகளை அற்புதமாக அமைத்திருக்கிறார்கள். மர்மமான கதையை சென்டிமென்ட் கலந்து ரசிக்கும்படி செய்த இயக்குனர் விக் ஆர்ம்ஸ்ட்ராங்கை பாராட்டலாம். ஆனால், மர்மமான முறையில் காணாமல் போனவர்கள் பற்றி அளிக்கும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை.
மொத்தத்தில் ‘ஃபிலைட் 257 நியூயார்க் டு லண்டன்’ திரில்லிங் பயணம்………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி