மேலும், அங்கு வெளியாகும் கார்ட்டூன் படங்களுக்கு 12 என்ற சர்டிபிகேட் கொடுப்பார்களாம். அந்த மாதிரி படங்களைத்தான் சிறுவர்கள் தனியாக சென்று பார்க்க முடியுமாம். ஆனால், கத்தி படத்திற்கோ 12ஏ என்ற சர்டிபிகேட்டை பிரிட்டன் சென்சார்போர்டு வழங்கியிருக்கிறது. அதனால் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் படத்தை பார்க்க வேண்டுமென்றால் 12 வயதுக்கு மேற்பட்ட ஒருவரின் துணையுடன்தான் பார்க்க முடியுமாம்.
இதற்கு காரணம் என்னவென்று விசாரித்தபோது, அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருக்கும் படங்களை சிறுவர்களை தனியாக வந்து பார்க்க பிரிட்டன் நாட்டவர்கள் அனுமதிப்பதில்லையாம். தனியாக வந்து பார்க்கும்போது அவர்களின் மனநிலை பாதிக்கக்கூடும் என்பதே இதற்கு காரணமாம். அதனால்தான் கத்தி போன்ற 12ஏ சான்றிதழ் கொடுக்கப்படும் படங்களை ஒரு துணையுடன் அவர்கள் வந்து கணடுகளிக்க வலியுறுத்தப்படுகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி