செய்திகள்,திரையுலகம் ஹரி – சூர்யா இணையும் படத்தின் பட்ஜெட் 50 கோடி!…

ஹரி – சூர்யா இணையும் படத்தின் பட்ஜெட் 50 கோடி!…

ஹரி – சூர்யா இணையும் படத்தின் பட்ஜெட் 50 கோடி!… post thumbnail image
சென்னை:-பூஜை படத்தை முடித்த பிறகு தன்னை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஹரியை கேட்டுக் கொண்டாராம் சூர்யா. அதற்கு ஒப்புக்கொண்ட ஹரி சம்பளமாக பெரிய தொகையைக் கேட்க, அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க வேறு தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள் என்பதால் அந்தப் படத்தை தன்னுடைய 2டி நிறுவனத்தின் மூலமே தயாரிக்க இருக்கிறார்.

இந்த தகவலை பிரஸ்மீட்டிலம் ஹரியும் உறுதி செய்தார். உங்களுடைய அடுத்த படத்தின் ஹீரோ யார்? என்று ஹரியிடம் கேள்வி கேட்டபோது, எனது அடுத்த படம் சூர்யா சார் கூடத்தான் என்று சொன்னார். இரண்டு, மூன்று கதைகளை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். அதில் ஒன்று சிங்கம் படத்தின் தொடர்ச்சி. பூஜை படத்தின் ரிலீசுக்குப் பிறகு சூர்யா சாருடன் உட்காந்து, இந்த கதைகளை விவாதிக்க உள்ளேன். அதன் பிறகு தான் எந்த கதையை படமாக்குவது என்று முடிவாகும். ஆனால் என்னுடைய அடுத்த பட ஹீரோ சூர்யா சார்தான். அது உறுதி என்றார். சூர்யாவை வைத்து ஹரி இயக்கும் படத்தின் பட்ஜெட் 50 கோடியாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி