இந்நிலையில் மலையாள நடிகர் மம்முட்டியும் இப்போது பெண்கள் உணவு சமைக்க வேண்டும் என்று பேசி சர்ச்சையில் மாட்டி உள்ளார். அவர் பேசும்போது, பெண்கள் குழந்தைகளுக்கு அவர்கள் கையாலேயே உணவு சமைத்து கொடுக்க வேண்டும். ஆனால் சிலர் அதை செய்வது இல்லை. குழந்தைகளுக்கு உணவு சமைக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமலேயே இருக்கிறார்கள். அதுபற்றி கவலைப்படுவதும் இல்லை. குழந்தைகளுக்கு உணவு சமைக்க நேரம் ஒதுக்காத பெண்களால் தாயாக உருவாக முடியாது என்றார்.
இதற்கு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டுவிட்டர் பேஸ்புக்கில் மம்முட்டியை கண்டித்து கருத்துக்கள் பதிவு செய்யப்படுகிறது. தாய் தான் குழந்தைகளை கவனிக்க வேண்டும் உணவு சமைக்க வேண்டும் என்கிறீர்களே தந்தையருக்கு குழந்தைகள் மேல் பொறுப்பு, தந்தை மார் உணவு சமைக்க மாட்டார்களா என்று மம்முட்டிக்கு கேள்வி விடுத்து இன்டர்நெட்டில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் மம்முட்டி அதிர்ச்சியாகியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி