செய்திகள்,திரையுலகம் ‘தல 55’ பொங்கலுக்கு இல்லை!…வெளியீட்டு தேதியில் வீரம் சென்ட்டிமெண்ட்!…

‘தல 55’ பொங்கலுக்கு இல்லை!…வெளியீட்டு தேதியில் வீரம் சென்ட்டிமெண்ட்!…

‘தல 55’ பொங்கலுக்கு இல்லை!…வெளியீட்டு தேதியில் வீரம் சென்ட்டிமெண்ட்!… post thumbnail image
சென்னை:-‘தல’ 55 படத்தின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி சரியாக நடந்தால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை தீபாவளிக்கு அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேபோல் டிசம்பரிலேயே படத்தை வெளியிடவும் திட்டமிட்டிருந்தனர். பிறகு என்ன நினைத்தார்களோ….2015 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர். தற்போது கிடைத்த தகவலின்படி….அதிலும் மாற்றம் இருக்கும் போல் தோன்றுகிறது.

இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்த வீரம் படம் ஜனவரி 10ம் தேதி வெளியானது. அந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதே சென்டிமென்ட்டை வைத்து, தற்போது கௌதம் மேனன் படத்தையும் பொங்கலுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான ஜனவரி 9ம் தேதியில் ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கிறதாம். இதற்கு அஜித் தரப்பிலும் ஓகே சொல்லிவிட்டதாக கேள்வி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி