சென்னை:-தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும், சென்னைப் பெண்ணாக இருந்து கொண்டு தமிழில் இன்னும் பெரிய வெற்றியைப் பெற முடியாத ஹீரோயினாகவே இருந்து வருகிறார் நடிகை சமந்தா. அவர் இதுவரை தமிழில் நடித்த படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும், தெலுங்கில் அவர் நடித்த பல படங்கள் தாறுமாறாக ஹிட் ஆகி அங்கு முன்னணியில் உள்ளார்.தமிழில் வெளிவந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்த்தார், அந்தப் படம் தோல்வியடைந்து விட்டது.
பின்னர் தெலுங்கில் தொடர்ச்சியாக சில ஹிட்களைக் கொடுத்துவிட்டு மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.’அஞ்சான்’ படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படமும் அதிர்ச்சித் தோல்வியடைந்து விட்டது. தற்போது ‘கத்தி’ படத்தில் நடித்திருக்கிறார். இன்னும் சில தினங்களில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்தப் படமாவது தனக்கு தமிழில் நல்ல ஒரு வெற்றியைத் தேடிக் கொடுக்கும் என சமந்தா நம்புகிறாராம்.’கத்தி’ படம் சமந்தாவுக்குக் கை கொடுத்தால் தொடர்ந்து அவர் தமிழிலும் முன்னணி இடத்தைப் பிடித்து விடுவார். சமந்தாவிற்கு ‘கத்தி’ எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பது தீபாவளியன்று தெரிந்துவிடும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி