சென்னை:-நடிகை திரிஷாவின், கடந்த 10 ஆண்டு கால சினிமா கேரியரில், நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகளுடன் எதிரும், புதிருமாகத் தான் இருந்து வந்தார். ஆனால், இப்போது ரொம்பவே மாறி விட்டார். நயன்தாரா போன்ற முன்னாள் போட்டி நடிகைகளுடன் பகை மறந்து, நட்பு வளர்த்து வருகிறார்.
அதேபோல், வளர்ந்து வரும் புதுவரவு நடிகைகளுக்கு, நடிப்பு குறித்த, டிப்ஸ் வழங்கி வருகிறார். திரிஷா, இப்போது கன்னடத்திலும் பிசியாக நடித்து வருவதால், அங்குள்ள புதுமுக நடிகைகளுக்கும் ஆலோசனைகள் வழங்குகிறாராம். திரிஷாவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை பார்த்து, வியந்து போயிருக்கிறது கோடம்பாக்கம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி