இந்த தகவலை ரஜினி நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்து உள்ளார். அவர் கூறும் போது, லிங்கா படம் தயாராகும் முன்பு நானும் ரஜினியும் பங்காரா மனுஷ்யா படத்தை பார்த்தோம். அந்த படத்தை ரீமேக் செய்து நடிக்கலாமே என்று ரஜினியிடம் சொன்னேன். அவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு சரி நானே ரீமேக் செய்து நடிக்கிறேன் என்றார்.
அதன் பிறகு தான் கே.எஸ்.ரவிக்குமார் லிங்கா படத்தின் கதையை ரஜினியிடம் சொன்னார். அந்த கதை ரஜினிக்கு பிடித்து போனது. உடனே என்னிடம் போனில் தொடர்பு கொண்டு முதலில் லிங்கா படத்தை முடித்து விடுகிறேன். அதன் பிறகு பங்காரா மனுஷ்யா ரீமேக்கில் நடிக்கிறேன் என தெரிவித்தார் என்றார்.பங்காரா மனுஷ்யா படம் 1972–ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதன் தமிழ் ரீமேக்கை கே.எஸ்.ரவிக்குமாரே இயக்குவார் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி