சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்கள் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் மட்டுமில்லாது திரையுலகத்தினர் அனைவரும் காத்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தனுசும் விஜய் படத்தை பார்க்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார். இதைப்பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில், கத்தி படத்தை முதல் நாள் முதல் ஷோவை பார்க்க ஆவலாக இருக்கிறேன். இன்னும் 5 நாட்கள் காத்திருக்க வேண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி