சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் வசிப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவிஞர் கே.டி.எம்.இக்பால் (வயது 74). இவர் அந்த நாட்டின் மிக உயர்ந்த கலாசார விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிங்கப்பூர் வானொலி நிலையத்திற்காக கடந்த 1970 முதல் 1980 வரை 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடல்களை எழுதி உள்ளார். மேலும் 7 கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இக்பாலின் சொந்த ஊர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் ஆகும். கலாசார விருது பெற்ற இக்பால் கூறுகையில், எனக்கு இந்த கலாசார விருது அறிவிக்கப்பட்டிருப்பதை வியக்கத்தக்க மரியாதையாக கருதுகிறேன். எனது முதல் காதல், கவிதை மீது தான். இந்த விருது கிடைக்கும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை என்றார்.
இந்த விருது 80 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் ரொக்கத்துடன் (சுமார் ரூ.39 லட்சம்) கூடியதாகும். இந்த விருதை அந்த நாட்டின் அதிபர் டோனி டான் கெங் யாம் வழங்கி, இக்பாலை கவுரவிப்பார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி