சென்னை:-கத்தி படத்திற்கு பிறகு நடிகர் விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இப்படம் விஜய் கேரியரிலேயே இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக வரவிருக்கிறது. படத்தின் தலைப்பு வைக்கப்படாத நிலையில், தற்போது டைட்டில் குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது.
சிம்பு தேவன் என்றாலே சரித்திர கதைகளுக்கு பெயர் பெற்றவர். மேலும் இப்படமும் அதே கதையம்சம் கொண்டதாகவும், படத்தின் டைட்டில் பெரும்பாலும் ‘மாரீசன்’ என்றே இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி