செய்திகள்,முதன்மை செய்திகள் அமெரிக்க நீதித்துறையின் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் வனிதா குப்தா நியமனம்!…

அமெரிக்க நீதித்துறையின் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் வனிதா குப்தா நியமனம்!…

அமெரிக்க நீதித்துறையின் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் வனிதா குப்தா நியமனம்!… post thumbnail image
வாஷிங்டன்:-இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க குடியுரிமைகள் ஒன்றிய வக்கீலுமான வனிதா குப்தா அமெரிக்க நீதித்துறை குடியுரிமைப் பிரிவு தலைவராக நியமிக்கபட்டு உள்ளார்.இந்த பதவிக்கு முதல் முறையாக தெற்கு ஆசியாவை சேர்ந்த ஒருவர் நியமிக்கபட்டு உள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிவில் உரிமைகளுக்கு நிரந்தர உதவி அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தா அடுத்த மாதம் பரிந்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வனிதா குப்தா குப்தா இணை முதல்வர் மதுணை உதவி அட்டர்னி ஜெனரல் மற்றும் சிவில் உரிமைகள் பிரிவு துணை அட்டர்னி ஜெனரல் பொறுப்பு பதவியில் பணியாற்ற போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் வனிதா தனது முழு வாழ்க்கையையையும், நமது நாட்டில் வாழும் அனைவருக்கும் சமமான நிதி கிடைக்க அர்ப்பணிப்பார் என்பது உறுதி என அட்டர்னி ஜெனரல் எரிக் கோல்டர் தெரிவித்து உள்ளார். தனது துறை சம்பந்தமான பணிகளை வருகிற 20ம் தேதி குப்தா தொடங்குகிறார்.தென் ஆசிய அமெரிக்கர்கள் முன்னணி அவரது நியமனத்தை பாராட்டி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி