ஆனால், ஏற்கனவே கஹானி இந்தியா முழுக்க வெற்றிகரமாக ஓடியதால், பெருவாரியான ரசிகர்கள் அப்படத்தை பார்த்து விட்டனர். அதனால் தென்னிந்தியாவில் அப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன்னை தென்னிந்தியாவின் வித்யாபாலனாக அனாமிகா மாற்றி விடும் என்று எதிர்பார்த்திருந்த நயன்தாராவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் தன்னை மையப்படுத்தும் கதைகளில் தொடர்ந்து நடிக்க அவர் விரும்பியபோது, எந்த இயக்குனரும் அவரை நம்பி படம் கொடுக்க முன்வரவில்லை. அதனால் மீண்டும் தனது வழக்கமான ரூட்டுக்கே திரும்பி தற்போது தனி ஒருவன், நண்பேன்டா உள்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்.
இந்த நேரத்தில், சமீபத்தில் தன்னிடம் கதை சொல்ல வந்த சில புதுமுக டைரக்டர்களிடம், 10 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக மரத்தை சுற்றி டூயட் பாடி எனக்கு போரடித்து விட்டது. அதனால் என்னை மையப்படுத்தி கதை பண்ணிவிட்டு வாருங்கள். முக்கியமாக இரண்டு சண்டை காட்சிகளாவது இருக்கும்படியாக கதை பண்ணுங்கள் என்று கூறும் நயன்தாரா, அப்படி நீங்கள் கதையுடன் வந்தால் கேட்டபடி கால்சீட் தருகிறேன் என்று கூறியுள்ளாராம். அதனால் கவர்ச்சியாக நடிக்க கால்சீட் கேட்க சென்றவர்கள், இப்படி கதையையே மாற்றச்சொல்கிறாரே என்ன செய்வது என்பது புரியாமல் தயாரிப்பாளர்களிடம் நயன்தாராவின் விருப்பத்தை கூறி வருகின்றனர். ஆனால் அனாமிகா கொடுத்த அதிர்ச்சி தோல்வியை மனதில் கொள்ளும் தயாரிப்பாளர்கள் நன்தாராவுக்கு என்ன பதில் சொல்வது என்பது புரியாமல் தடுமாறி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி