சென்னை:-ஆந்திர மாநிலம் கடலோர பகுதிகளில் ஹூட் ஹூட் புயல் கரை கடந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக விசாகப்பட்டினம் பகுதி சின்னாபின்னமானது.புயல் நிவாரண பணிகளை அரசு முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளது. புயல் நிவாரணத்துக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. புயல் நிவாரணத்துக்கு நிதி உதவி அளிப்பதாக தமிழக நடிகர்கள் அறிவித்துள்ளனர்.
நடிகர் சூர்யா குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த தொகை சூர்யா சார்பில் ரூ.25 லட்சமும் நடிகர் கார்த்தி சார்பில் ரூ.12 லட்சமும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார்பில் ரூ.12½ லட்சம் என வழங்கப்படுகிறது. விஷால் ரூ.15 லட்சமும் பிரகாஷ்ராஜ் ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி