செய்திகள்,திரையுலகம் அன்னாபெல் (2014) திரை விமர்சனம்…

அன்னாபெல் (2014) திரை விமர்சனம்…

அன்னாபெல் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி மியாவுக்கு (அன்னபெல் வேலிஸ்) அன்புப் பரிசு ஒன்றை வாங்கித் தர நினைக்கிறான் ஜான் (வார்டு ஹார்டன்).இயற்கையாகவே பொம்மைகளின் மீது அதிக ஆசை கொண்ட மியாவுக்கு, பெரிய ‘அன்னாபெல்’ பொம்மை ஒன்றை அவன் வாங்கித் தருகிறான். அது வீட்டிற்குள் நுழைந்த நேரம், அன்றிரவு பக்கத்து ஃப்ளாட்டில் இருக்கும் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட தம்பதியால் ஜானும், மியாவும் கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள். அதோடு அந்த அன்னாபெல் பொம்மையையும் தூக்கிக் கொண்டு வேறொரு அறைக்குள் நுழைகிறாள் அவர்களில் ஒரு பெண். சரியான நேரத்தில் அந்த இடத்திற்கு வரும் போலீஸாரால் அவர்கள் இருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டு ஜானும், மியாவும் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

எல்லாம் சரியாகி மீண்டும் வீடு திரும்பும் மியாவுக்கு, அங்கு ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பது தோன்றுகிறது. அந்த அன்னாபெல் பொம்மை காரணமாக இருக்கலாமோ என மியா நினைக்க, அதனால் அந்த பொம்மையை வெளியில் தூக்கி எறிகிறான் ஜான். அதன் பின்னரும் அடுத்தடுத்து சில மர்மமான சம்பவங்கள் நடக்க, மியா குழந்தை பெற்ற கையோடு வேறொரு வீட்டிற்கு மாறுகிறார்கள். அந்த வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருள்களோடு அந்த அன்னாபெல் பொம்மையும் மீண்டும் வீட்டிற்குள் நுழைகிறது.இதன் பிறகு அந்த பொம்மையால் என்ன நடந்தது..? அந்த பொம்மையிடமிருந்து அவர்கள் தப்பிதார்களா..? என்பதை திகில் சம்பவங்களோடு கூறுவதே ‘அன்னாபெல்’ படத்தின் மீதிக்கதை.

‘கான்ஜூரிங்’கின் படத்தின் வெற்றியால் இந்த ‘அன்னாபெல்’லுக்கு உண்மையிலேயே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பே இப்படத்திற்கு குறைவே. படத்தின் முதல் 1 மணி நேரம் ரொம்பவும் மெதுவாக செல்கிறது. அதோடு பின்னணி இசையையும், கேமரா கோணங்களையும் சஸ்பென்சாக காட்டிவிட்டு ‘சைலன்ஸா’க்கியிருக்கிறார் இயக்குனர் ஜான் ஆர்.லியோனெட்டி. கடைசி அரை மணி நேரத்தில்தான் ரசிகர்களை பயமுறுத்தவே ஆரம்பிக்கிறது ‘அன்னாபெல்’. காட்சிகளின் வழியேயும், பின்னணி இசை மூலமும் ரசிகர்களை பயமுறுத்த முயன்றதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

ஆக மொத்தத்தில் ‘அன்னாபெல்’ திகில் படம்………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி