சென்னை:-தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர் பலத்தை கொண்டவர்கள் அஜித்-விஜய். இவர்களது ரசிகர்கள் டுவிட்டரில் வாரம், வாரம் ஏதெனும் டாப்பிக் எடுத்து கொண்டு மல்லு கட்டுவார்கள்.அந்த வகையில் நடிகர் மனோபாலா, அஜித்தை சந்தித்த பிறகு தன் டுவிட்டர் பக்கத்தில், இன்று அஜித்தை சந்தித்தேன். மிகவும் அமைதியான பணிவானவர், ஜெண்டில்மேன். எனது குடும்பத்தினர் பற்றி விசாரித்தார்.
ரொம்ப நாள் ஆயிடுச்சுல என்று கேட்டார். ஆமாம் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அவருடன் நடிக்க விரும்புகிறேன். பார்க்கலாம் என்று டுவிட் செய்திருந்தார். இதை தொடர்ந்து வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் இவர் பெயரை மென்ஷன் செய்து கமெண்ட் அடிக்க உங்க ஆட்டத்திற்கு நான் வரவில்லை. விஜய் என் தம்பி. தயவுசெய்து பிரச்சினை ஆக்காதீர்கள் என்று மீண்டும் டுவிட் செய்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி