சிங்கப்பூர்:-பிரேசில்–ஜப்பான் அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி சிங்கப்பூரில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 4–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை எளிதில் தோற்கடித்தது.
கேப்டன் நெய்மார் 4 கோல்களையும் அடித்தார். 58–வது சர்வதேச போட்டியில் ஆடிய நெய்மார் இதுவரை 40 கோல்களை பதிவு செய்துள்ளார். உலக கோப்பை தோல்வியை தொடர்ந்து துங்கா பயிற்சியாளராக பதவி ஏற்ற பிறகு 4வது போட்டியில் ஆடிய பிரேசில் அணி பெற்ற 4வது வெற்றி இதுவாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி