சென்னை:-தீபாவளிக்கு வெளியாகும் ‘கத்தி‘ படம் பெருவாரியான தியேட்டர்களை கைப்பற்றியிருக்கிறது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு வடஆற்காடு தென்ஆற்காடு ஏரியாக்களில் மொத்தம் 200 தியேட்டர்களில் வெளியாகிறது. கோவையில் 80 தியேட்டர்கள், மதுரையில் 55 தியேட்டர்கள், திருநெல்வேலி-கன்னியாகுமரி- 20 தியேட்டர்கள். சேலம்- 60 தியேட்டர்களில் வெளியாகிறது.
மேலும், வெளிநாடுகளில் யுஎஸ்ஏ- 80 தியேட்டர்கள், யுகே- 70 தியேட்டர், பிரான்ஸ்- 25 தியேட்டர்கள், மலேசியா- 120 தியேட்டர்கள், வெளி மாநிலத்தில் கேரளா- 200 தியேட்டர்களில் வெளியாகிறதாம். இதுதவிர இன்னும் சில தியேட்டர்களும் இந்த பட்டியலில் சேரும் வாய்ப்பு உள்ளதாம்.
மற்றபடி தீபாவளிக்கு வெளியாகும் ‘பூஜை’ படத்துக்கு தமிழ்நாட்டில் இதுவரை 265 தியேட்டர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாம். தற்போது வெளியாகியுள்ள சில படங்கள் தீபாவளிக்கு முன்பு ஓடி முடித்து விட்டால் இன்னும் அதிகப்படியான தியேட்டர்கள் பூஜை படத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி