அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!…

புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!…

புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!… post thumbnail image
விசாகப்பட்டினம்:-ஆந்திர மாநிலத்தை தாக்கிய ஹுட் ஹுட் புயலால் விசாகப்பட்டினம் நகரம் முற்றிலும் சிதைந்து போயுள்ளது. மின் வினியோகம் தடைபட்டுள்ளதுடன், தொலை தொடர்பு சேவையும் முடங்கியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் பார்வையிட்ட பின், மத்திய அரசு 2000 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது அம்மாநிலத்திற்கு நிவாரண உதவியாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இது பற்றி பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-ஆந்திர மாநில மக்களுக்கு நாங்கள் துணை நிற்போம். ஒடிசா மற்றும் ஆந்திர மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் இந்திய அரசு வழங்கும். மின்சாரம், குடிநீர் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் விரைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கவேண்டிய காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கவேண்டும். தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புயல் பற்றிய தகவல்களை துல்லியமாக இந்திய வானிலை துறை தெரிவித்தது பேருதவியாக இருந்தது.அரசும் மக்களுக்கு தகுந்த எச்சரிக்கை விடுத்தது. இதனால் அவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த கூட்டு முயற்சியால் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி