செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோய் தாக்குதலுக்கு 4447 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!…

எபோலா நோய் தாக்குதலுக்கு 4447 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!…

எபோலா நோய் தாக்குதலுக்கு 4447 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!… post thumbnail image
ஜெனிவா:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லோன், கினியா ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோய் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களையும் தாக்குகிறது. இந்த நோய்க்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 4,447 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நோயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியாரா லோன், கினியா, லைபீரியா ஆகிய நாடுகளில் அந்த நோயின் தாக்கத்தை குறைக்க முடியவில்லை. அங்கு ‘எபோலா’ நோய் வேகமாக பரவி வருகிறது. தற்போது 8,914 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவி வரும் வேகத்தை பார்த்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆக உயரும் அபாயம் உள்ளது.

இதை உலக சுகாதார நிறுவன உதவி டைரக்டர் ஜெனரல் புரூஷ் அய்ல்லார்டு கூறினார். ‘எபோலா’ நோய் தாக்கம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் மிகவும் சாதாரணமாக அதே நேரத்தில் விரைவாக கண்டறியும் வகையில் ரத்த பரிசோதனை மூலம் ‘எபோலா’ நோய் கண்டறியப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி