கடலில் விழும் விமானம் வெடித்து சிதறுகிறது. இதனால் அதிபர் அடைக்கப்பட்ட பெட்டி கடலுக்கு அடியில் 7000 அடிக்கும் கீழே சென்றுவிடுகிறது. இதற்குள் அதிபர் பயணம் செய்த விமானம் கடலில் விழுந்த தகவல் அமெரிக்க அதிகாரிகளுக்கு கிடைக்கிறது. அதே சமயம் கடலில் விழுந்த பெட்டியில் உள்ள கருவியின் மூலம் அதிபர் எங்கிருக்கிறார் என்ற தகவலும் அந்நாட்டு அதிகாரிகளுக்கு கிடைக்கிறது.
அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர், அவர் இருக்கும் இடத்தை நெருங்கும்போது ராட்சத மிருகம் ஒன்று அவர்களை தாக்குகிறது. இதனால் அந்த ராட்சத மிருகத்தை தாண்டி அதிபரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை.அதிபர் அடைக்கப்பட்டுள்ள பெட்டியில் நான்கு மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் இருக்கும் நிலையில் நாயகன் ஆலிவர் தலைமையில் ஒரு குழு அதிபரை காப்பாற்ற கடலுக்குள் செல்கிறது.
ஆலிவர் தலைமையிலான குழு அதிபர் இருக்கும் பெட்டியை நெருங்கும் நேரத்தில் அங்கே ஏலியன்ஸ் என்ற வேற்று கிரகவாசிகள் நாயகன் உள்ளிட்டோரை தாக்குகின்றனர். அப்போது கடலுக்கு மேலே தங்களை தாக்குவது மிருகம் இல்லை. அது இந்த ஏலியன்சின் வேலை தான் என்பதை ஆலிவர் குழு தெரிந்துகொள்கிறது.ஒரு வழியாக ஏலியன்சுடன் சண்டையிட்டு அதிபரை மீட்டுக்கொண்டு கடலின் மேற்பரப்புக்கு வருகிறான் ஆலிவர். பின்னர் அதிபரை நாடு திரும்புமாறு அதிகாரிகள் மற்றும் படையினர் கேட்டுக்கொள்கின்றனர்.ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், ஏலியன்ஸ் உயிருடன் இருந்தால் உலகில் உள்ள மக்களை அது அழித்துவிடும். எனவே அதை அழித்த பின்னரே, தான் நாடு திரும்ப முடியும் என்று கூறிவிடுகிறார். இதனால் ஏலியன்ஸை கொல்ல ஆலிவர் குழு களமிறங்குகிறது.இறுதியில், வேற்றுக்கிரக வாசிகளை ஆலிவர் குழு கொன்றதா? அதிபர் நாடு திரும்பினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
இப்படத்தின் நாயகனான நடித்துள்ள ட்ரவர் டோனோவான் ஆக்சன் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். நாயகியாக நடித்துள்ள லிண்டாவுக்கு பெரிதாக எதுவும் வேலையில்லை. பிளம்பர் என்ற கதாபாத்திரத்தில் வரும் மியா ஹாரிசன் நடிப்பில் தடுமாறுகிறார். படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக அமைந்து ரசிகர்களை மிரளவைத்துள்ளது. இயக்குனர் நிக் லியோன் தனது முந்தைய படங்களை போல் இதிலும் பளிச்சிடுகிறார்.
மொத்தத்தில் ‘ருத்ரம் 2014’ சாகசம்………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி