விலை மாது, செக்ஸ் என்றெல்லாம் படத்துக்கு விளம்பரபடுத்தப்பட்டு உள்ளது. இது சமூகத்தில் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ரஜினிகாந்தை இழிவுபடுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை என்றும் ரஜினி வாழ்க்கைக்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் டைரக்டர் விளக்கம் அளித்தார். ரஜினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் படத்தின் பிரத்யேக காட்சியை திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்தார்.
ஆனால் ரஜினியும், குடும்பத்தினரும் படம் பார்க்க வரவில்லை. ரஜினியின் வக்கீல் மட்டுமே படத்தை பார்த்தார். இந்நிலையில் படத்தின் தலைப்பை மாற்ற டைரக்டர் பைசல் முன் வந்துள்ளார். அவர் கூறியதாவது:
மெய்ன் ஹுன் ரஜினிகாந்த் படத்தில் தயாரிப்பாளர் நிறைய முதலீடு செய்துள்ளார். படத்தை வருகிற 17ம் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளோம். படம் வெளிவராவிட்டால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் எனவே மெய்ன் ஹுன் ரஜினிகாந்த் தலைப்பை மெய்ன்ஹுன் ரஜினி என்று மாற்ற முடிவு செய்துள்ளோம். ரஜினி மனதை புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி