சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புத்தம்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் நிவர்த்தி செய்துள்ளது. பாடல்கள் ஹிட்டாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாகியுள்ளது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், ‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு, தீபாவளி புதன் கிழமை வருவதால் அதற்கு 5 நாட்கள் முன்னதாக அக்டோபர் 17ம் தேதி தேதியே படத்தை வெளியிடவிருக்கிறார்கள் என்ற செய்தி கோலிவுட்டில் பரவியது. ஆனால், திட்டமிட்டப்பட கத்தி படம் தீபாவளியன்று அக்டோபர் 22-ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி