செய்திகள்,திரையுலகம் காஜல் அகர்வாலைக் கிண்டலடித்த பிரபல வில்லன் நடிகர்!…

காஜல் அகர்வாலைக் கிண்டலடித்த பிரபல வில்லன் நடிகர்!…

காஜல் அகர்வாலைக் கிண்டலடித்த பிரபல வில்லன் நடிகர்!… post thumbnail image
சென்னை:-சாமி, திருப்பாச்சி, கொக்கி, சத்யம், கோ, தாண்டவம், சமீபத்தில் வெளிவந்த அரண்மனை உட்பட பல தமிழ்ப் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாசராவ். இவர் மீது இங்கிருந்து தெலுங்குத் திரையுலகிற்கு நடிக்கச் செல்லும் பல தமிழ் நடிகர்கள் குற்றச்சாட்டுக்களை வைப்பார்கள். தமிழ் நடிகர்கள் தெலுங்குப் படங்களில் நடிப்பதற்கு எதிரானவர் இவர் என்ற பேச்சும் உண்டு. ஆனால், தமிழ் இயக்குனர்களோ இவரை தமிழ்ப் படங்களில் தொடர்ச்சியாக நடிக்க வைத்து வருகிறார்கள்.

எதையாவது பேசி வம்பில் சிக்குவதும், தேவையற்ற கமெண்ட் அடிப்பதும் இவருடைய பழக்கம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.சமீபத்தில் அப்படித்தான் நடிகை காஜல் அகர்வாலைப் பற்றிக் கமெண்ட் அடித்து வம்பில் சிக்கிக் கொண்டுள்ளார். ராம்சரண் தேஜா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த ‘கோவிந்தடு அந்தாரிவாடிலே’ படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு ராம்சரணும் வரவில்லை, காஜல் அகர்வாலும் வரவில்லை. அப்போது மைக்கைப் பிடித்துப் பேசிய கோட்டா சீனிவாசராவ், ஹீரோயின்கள் அவர்களது அங்கங்களை மட்டுமே காட்டுவார்கள், பேச வர மாட்டார்கள். அதனால் காஜல் இங்கு வரமாட்டார்” என்ற ரீதியில் பேசியிருக்கிறார். ஆனால், திடீரென காஜல் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாக வர நேரிட்டது என விளக்கியிருக்கிறார் காஜல். அது கோட்டாவிற்கும், பத்திரிகையாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய கோட்டா சீனிவாசராவ், தான் பேசியதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கெஞ்சியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி