செய்திகள்,திரையுலகம் கத்தி டீசருக்காக காப்பியடித்த இசையமைப்பாளர் அனிருத்!…

கத்தி டீசருக்காக காப்பியடித்த இசையமைப்பாளர் அனிருத்!…

கத்தி டீசருக்காக காப்பியடித்த இசையமைப்பாளர் அனிருத்!… post thumbnail image
சென்னை:-சமீபத்தில் இளம் இசையமைப்பாளர்கள் தங்களின் சரக்கு என்று இசையமைத்த பல பாடல்கள், பல மியூஸிக் டிராக்குகள் வெளிநாட்டு ஆல்பங்களில் இருந்து திருடப்பட்டவை என்று இணையதளங்களில் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி கையும் களவுமாக சமீபத்தில் மாட்டி இருப்பவர் அனிருத்.

ஏற்கனவே ஆண்ட்ரியாவுக்கு லிப்லாக் கொடுத்ததை வெட்டவெளிச்சமாக்கியதும் இணையதளங்கள்தான். இதோ இப்போது கத்தி படத்தின் டீசருக்கு அனிருத் அமைத்த இசை எங்கிருந்து சுடப்பட்டது என்பதையும் அம்பலப்படுத்தி இருக்கிறது. டிவிபிபிஎஸ் – டோனி ஜூனியர் (DVBBS & Tony Junior )இருவரும் இணைந்து உருவாக்கிய இம்மார்டல் (Immortal )என்ற மியூஸிக் ஆல்பத்திலிருந்து சுட்டிருக்கிறார் அனிருத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி