செய்திகள்,திரையுலகம் 2 நாட்களில் ‘ஐ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!…

2 நாட்களில் ‘ஐ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!…

2 நாட்களில் ‘ஐ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ படம் தீபாவளிக்கு ரிலீசாகாமல் தள்ளிப் போகும் காரணம் குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறுகையில், தெலுங்கிலும் இந்தியிலும் டப்பிங் பேசும் வேலைகள் நடந்து வருகிறது. இந்தியில் கிட்டதட்ட டப்பிங் வேலைகள் முடிந்து விட்டது. தெலுங்கில் டப்பிங் வேலைகள் முடிவடைய இன்னும் 10 முதல் 15 நாட்கள் ஆகும். இதற்கிடையே ஏ.ஆர்.ரகுமானும் படத்தின் பின்னணி இசை சேர்க்கும் பணிகளை செய்து வருகிறார்.

அதனால் நவம்பர் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். படம் வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். மேலும் இரண்டு பிரிமியர் ஷேக்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ஒன்றை சிங்கப்பூரிலும், மற்றொன்றை அமெரிக்காவிலும் நடத்த உள்ளோம். இதில் அமெரிக்காவில் நடக்கும் பிரிமியர் ஷோவில் கலந்து கொள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி