ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஜீவா, மெட்ராஸ் படங்கள் ஓடிக்கொண்டிருப்பதால் உடனடியாக அந்த படத்தை வெளியிட முடியவில்லையாம். அதோடு, தீபாவளிக்கு சில மெகா படங்கள் திரைக்கு வருவதால், தீபாவளிக்கு பிறகு வன்மம் படத்தை வெளியிடுகிறார்களாம்.அதோடு, இந்த வன்மம் படத்தை தயாரித்துள்ள நேமிசந்த் ஜெபக் தயாரித்துள்ள இன்னொரு படமான மீகாமன் படவேலைகளும் தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது.
ஆர்யா நடித்துள்ள இந்த படம் எப்போது ரிலீசாகும் என்று அந்த கம்பெனி வட்டாரத்தை விசாரித்தபோது, முதலில் தயாரித்த படம் வன்மம்தான். அதனால் அந்த படத்தை ரிலீஸ் செய்த பிறகுதான் மீகாமன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்கிறார்கள். விஜய் சேதுபதியின் வன்மத்திற்கு பிறகுதான் மீகாமன் ஆர்யா தியேட்டருக்கு வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி