சென்னை:-அஜீத்–கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் அஜீத்தின் 55-வது படத்தின் தலைப்பாக ‘சத்யா’ அல்லது ‘ஆயிரம் தோட்டாக்கள்’ ஆகிய பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இதுதவிர, மேலும் 3 தலைப்புகளை கௌதம் மேனன் பரிசீலனையில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆயுதபூஜைக்கே படத்தின் தலைப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், தலைப்பு முடிவாகததால் தள்ளிப்போனது. தற்போது விரைவில் இப்படத்தின் தலைப்பை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தீபாவளிக்கு முன்னதாகவே படத்தின் தலைப்பை வெளியிடுவார்கள் என கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி