* படத்தில் அஜீத்துக்கு இரண்டு கெட்அப். இரண்டு கேரக்டர் அல்ல. ஒன்று வாலி காலத்து அழகு தோற்றம். இன்னொன்று மங்காத்தா காலத்து சால்ட் அண்ட் பெப்பர் தோற்றம்.
* அஜீத்தின் 28 வயது முதல் 38 வயது வரையிலான பத்து வருட வாழ்க்கைதான் கதை.
* அஜீத்திற்கு இரண்டு ஜோடிகள் பிளாஷ் பேக்கில் திரிஷா ஜோடி. கதை காலத்தில் அனுஷ்கா ஜோடி. இருவருக்கும் காமினேஷன் கிடையாது. இருவருக்கும் சமமான பங்குள்ள கேரக்டர்.
* படத்திற்காக அஜீத் குத்துச்சண்டையும், கிதார் வாசிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார். ஒன்றை சண்டை காட்சியிலும், மற்றொன்றை பாடல் காட்சியிலும் பயன்படுத்தியிருக்கிறார் கௌதம் மேனன்.
* படத்தில் ஹீரோயிசம் பன்ஞ் டயலாக் எதுவும் கிடையாது. ஆனால் கதையோட்டத்துடன் அஜீத் பேசும் சில வசனங்களில் அனல் பறக்கும்.
* நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ், தாமரை கூட்டணி இணைந்திருக்கிறது. மொத்தம் 5 பாடல்கள். ஐந்தும் ஐந்துவித சூழலில் உருவாகி இருக்கிறது. ஹீரோ பில்டப் சாங், அறிமுக சாங் எதுவும் கிடையாது.
* படத்தின் தலைப்பை போலவே கிளைமாக்சையும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார் கவுதம் மேனன். மொத்தம் 3 கிளைமாக்சுகளை கையில் வைத்திருக்கிறார். கடைசியாக அஜீத்துடன் உட்கார்ந்து பேசி அவர் எதை டிக் செய்கிறாரோ அதை படம்பிடிக்க உள்ளார்.
* கௌதம் மேனன் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த துப்பறியும் ஆனந்த் கதையைத்தான் சில மாற்றங்கள் செய்து இதனை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களுக்கும் ஸ்கிரிப்ட் ரெடியாக வைத்திருக்கிறார்.
* படத்திற்கு சத்யா, அல்லது ஆயிரம் தோட்டாக்கள் என்று தலைப்பு வைக்கப்படலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி