சென்னை:-‘கடல்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் புதிய படத்தை ஒன்றை இயக்குகிறார். இதில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேர்வு செய்யப்பட்டு கடைசியாக நித்யா மேனன் தேர்வாகியுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இவர் மணிரத்னம் படத்தில் நான்காவது முறையாக இணைகிறார்.
மணிரத்னம் படத்தில் முதன்முதலாக ‘பம்பாய்’ படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். அதன்பிறகு ‘இருவர்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது குறித்து பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் தளத்தில் கூறும்போது, சூப்பர் சூப்பர், மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். எனது கேரக்டரையும், கதையையும் மணிரத்னம் எனக்கு விளக்கினார். என சந்தோஷமாக பகிர்ந்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி