செய்திகள்,திரையுலகம் கார் விபத்தில் உயிர்தப்பிய தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’!…

கார் விபத்தில் உயிர்தப்பிய தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’!…

கார் விபத்தில் உயிர்தப்பிய தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’!… post thumbnail image
சென்னை:-ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்பாபு. அதோடு, ரஜினியும், மோகன்பாபுவும் நல்ல நண்பர்களும் கூட. இவர் தற்போது ரவுடி என்ற படத்தில் நடித்துள்ளார். இவரது வீடு ஐதராபாத்தில் மதாபூர் பகுதியில் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு தனது மகள் மஞ்சு லட்சுமியுடன் காரில் சென்று கொண்டிருந்தாராம் மோகன்பாபு. அப்போது ஒரு போக்குவரத்து நெரிசலான சாலையில், வளைவில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒரு கார் மோகன்பாபு சென்று கொண்டிருந்த கார் மீது பலமாக மோதியதாம்.

இந்த விபத்தில் இரண்டு கார்களும் பலத்த சேதமடைந்ததாம். ஆனபோதும்,. காரில் சென்ற மோகன்பாபுவுக்கோ அவரது மகள் மஞ்சு லட்சுமிக்கோ எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினார்களாம். மேலும், காருக்குள் பிரபல நடிகர் மோகன்பாபு இருக்கிறார் என்றதும் ஒரு பெரும் கூட்டமே அங்கே கூடி விட்டதாம். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, மோகன்பாபுவை வேறு காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி