புது டெல்லி:-பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் சக நிறுவனரும், மிக குறுகிய காலத்தில் உலகின் இளம்வயது கோடீஸ்வரர் ஆனவருமான மார்க் ஸுக்கெர்பெர்க் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.
இந்தியாவை எண்ணியல் மயமாக்கும் பிரதமர் மோடியின் எதிர்கால திட்டத்துக்கு தனது ஃபேஸ்புக் நிறுவனம் எவ்வகையில் எல்லாம் உதவிகரமாக இருக்க முடியும்? என்பது தொடர்பாக பிரதமருடனான இந்த சந்திப்பின்போது ஆலோசனை நடத்தியதாக தெரிவித்த ஸுக்கெர்பெர்க், மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத்தையும் சந்தித்து, இது தொடர்பாக பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி