சென்னை:-நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார்.சமந்தாவுக்கு கோபமே வராது என்றும், எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர் என்றும், பட உலகினர் பாராட்டுகின்றனர். தனக்கு கெடுதல் நினைப்பவர்களிடமும் கோபப்பட மாட்டார் என்று கூறுகின்றனர். இது குறித்து சமந்தாவிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:–
நான் பெரிய கோபக்காரி. எனக்கு கோபம் வராது என்று யார் சொன்னது. கடுமையாக கோபப்படுவேன். ஆனால், அதை வெளியே காட்ட மாட்டேன். என் மனதுக்கு உள்ளேயே திட்டி தீர்ப்பேன்.
ஒரு டைரக்டர் படப்பிடிப்பில் எனக்கு ரொம்ப தொல்லை கொடுத்தார். ஒரே காட்சியில் திரும்ப திரும்ப நடிக்க சொல்லி கஷ்டப்படுத்தினார். அரை மணி நேரம் அந்த காட்சியை எடுத்தார். அப்போது, அவர் மேல் எனக்கு கோபம், கோபமாய் வந்தது. மனதுக்குள் ‘ராஸ்கல்’, முட்டாள், பன்றி என்றெல்லாம் திட்டினேன். இப்படித்தான் என் கோபத்தை வெளிப்படுத்துவேன். இவ்வாறு சமந்தா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி