3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், மத்திய அரசின் உயரிய விருதகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ள அமிதாப் பச்சன், 1969-ம் ஆண்டில் இந்தி திரைப்பட உலகில் காலடி பதித்தார்.
அந்நாளின் இந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து 1971-ம் ஆண்டு இவர் நடித்த ‘ஆனந்த்’ திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம் அமைந்ததையடுத்து, 1973-ல் வெளியான ‘ஜஞ்சிர்’ படத்தில் அதிரடி கதாநாயகனாக அமிதாப் பச்சன் அறிமுகமானார்.அதே ஆண்டில் நடிகை ஜெயாவை திருமணம் செய்த இவர், பாலிவுட் கதாநாயகர்களில் மிகவும் பிரபலமானவராக உலகளாவிய அளவில் அறியப்பட்டார். குடும்ப நண்பரான முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நெருக்கமாக நட்பு பாராட்டிய இவர், காங்கிரஸ் கட்சிக்காக பல தேர்தல்களின்போது தீவிர பிரசாரமும் செய்துள்ளார்.
190-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அமித்தாப் பச்சன் தற்போது, ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு இன்றைய பாலிவுட் பிரபலங்கள் முதல் அவருடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் பிரபலங்கள், அவரது ரசிகர்கள் என பல்லாயிரக் கணக்கானவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி