செய்திகள்,திரையுலகம் விமான நிலைய அதிகாரிகளுடன் மோதிய கவர்ச்சி நடிகை!…

விமான நிலைய அதிகாரிகளுடன் மோதிய கவர்ச்சி நடிகை!…

விமான நிலைய அதிகாரிகளுடன் மோதிய கவர்ச்சி நடிகை!… post thumbnail image
மும்பை:-சமீபத்தில் பிரிட்டீஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க சென்றிருந்தாராம் நடிகை சன்னி லியோன். அப்போது அவர் விமானத்தில் ஏற சென்றபோது, ஏற்கனவே அவர் எடுத்திருந்த பிஸ்னஸ் வகுப்பு டிக்கெட்டை மாற்றி எக்னாமிக் வகுப்பு டிக்கெட்டாக மாற்றிக்கொடுத்தார்களாம். அதோடு, வேறு வழியில்லை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்களாம்.

ஆனால், அதற்கு செவி கொடுக்காத சன்னி லியோன், அப்படியென்றால் நான் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்று சொல்லி இறங்கி வந்து விட்டாராம். பின்னர், அவரது லக்கேஜ்களை எடுத்தபோது, சன்னியின் பேக் ஒன்றை காணவில்லையாம். விமான நிலைய ஊழியர்கள் தேடிப்பார்த்தும் அது கிடைக்கவில்லையாம்.

அதில்தான் சன்னிலியோன் பயன்படுத்தும் முக்கியமான மேக்கப் சாதனங்கள் இருந்ததாம். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்ட அவர், விமான நிலைய ஊழியர்களிடமும் கடுமையாக வாக்குவாதம் செய்தாராம். இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள சன்னிலியோன், இனிமேல் நான் பிரிட்டீஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் என் வாழ்நாளில் ஒருநாள்கூட செல்லமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி