இந்நிலையில் மாணவி ஜியோசின் யாரோ ஒருவரை சந்திக்க சென்றபோது உயிரிழந்துள்ளார் என்று அவருடன் படிக்கும் சக மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜியோசினின் தோழி குயிங் வான் பேசுகையில், ஜியோசின் எங்கே சென்றார் என்று எனக்கு தெரியாது, அவர் என்னிடம் எதையும் கூறவில்லை. ஒருவேளை அவருடைய காதலன் அல்லது வேறு யாரேனும் ஒருவரை சந்திக்க வெளியே செல்ல முயற்சி செய்து இருக்கலாம். என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் பேசுகையில், வெளியாட்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்குள் வந்த சம்பவத்தை அடுத்து நாங்கள் மின்சார வேலியை அமைத்தோம். நாங்கள் மாணவர்களின் பாதுகாப்புக்காகவே அதனை செய்தோம். ஆனால் மாணவி ஒருவர் வெளியே செல்ல இந்த முயற்சியை செய்வார் என்று நாங்கள் கற்பனை செய்துக் கூடபார்க்கவில்லை. வேலியில் மின்சாரம் இருப்பது அனைவருக்கும் தெரியும். என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று இணையதள செய்திகள் வெளியாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி