இதன் பின்னர் சாமுவேல்சும், ராம்தினும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் முதலில் பொறுமையாக விளையாடினாலும் பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இந்திய பவுலர்களின் பந்துகள் எல்லைக்கோட்டை நோக்கி பறந்த வண்ணம் இருந்தன. சாமுவேல்ஸ் சதம் விளாசினார்.51 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் எடுத்த ராம்தின் ரன் குவிக்கும் நோக்கில் அடித்து ஆட முற்பட்டு 61 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் பொல்லார்டு, ரஸ்ஸல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்தது. சாமுவேல்ஸ் 126 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதையடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக அஜிங்கியா ரகானே, ஷிகர் தவான் களமிறங்கினர். 24 ரன்கள் ரன்களில் ரகானே ரன் அவுட் ஆக, அடுத்து வந்த விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ராயுடு 13 ரன்களிலும், ரெய்னா ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 83 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
நெருக்கடியான நேரத்தில் ஷகர் தவானுடன் கேப்டன் டோனி களமிறங்கி நிதானமாக ஆட முற்பட்டார். ஆனால், 21 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த அவர், சமி பந்தில் போல்டாகி வெளியேறினார். அரை சதம் கடந்து ஆறுதல் அளித்த தவான், 68 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னணி பேட்ஸ்மேன்கள் வெளியேறிய நிலையில், பின்கள வீரர்கள் விக்கெட்டைக் காப்பாற்ற போராடியது.புவனேஸ்வர் குமார் (2), மிஷ்ரா (5), மோகித் சர்மா (8), ஷமி (19) ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 197 ரன்களில் சுருண்டது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் போட்டித் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி