சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்த யான் படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. ஜீவா நடித்திருந்தாலும், ரவி கே சந்திரன் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் என்பதால் யான் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. யான் படம் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அரதப்பழசான கதை அம்சமும், அவுட்டேட்டட் திரைக்கதையும் யான் படத்துக்கு எதிராக அமைந்துவிட்டன. தொடர்ந்து தோல்விப்படங்களையே கொடுத்து வரும் ஜீவா யான் படத்தை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார்.
தற்போது யான் படத்துக்குக் கிடைத்த ரிசல்ட் ஜீவாவை கடுமையாக பாதித்துள்ளதாம். இனி கோட் சூட் போட்டுக்கொண்டு ஹை கிளாஸ் கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டார். இனிமேல் மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு டைப்பில் பக்கா லோக்கல் கேரக்டர்களில் மட்டுமே நடிக்கப்போகிறாராம். இப்படி ஒரு முடிவை அவர் எடுத்ததால், கதை சொல்ல வருகிறவர்களிடம் நமக்கு கோட் சூட் எல்லாம் செட்டாகாது பாஸ், லோக்கல் பேக்ட்ராப்பில் கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாராம் ஜீவா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி