புதுடெல்லி:-இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பர்க் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்து சென்றுள்ள நிலையில், தற்போது மார்க்கும் இந்தியா வந்துள்ளது தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சாண்ட்பர்க் இந்தியா வந்த போது தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், சமூக வளைதளமான பேஸ்புக்கை உபயோகப்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதாக கூறினார். எனவே இந்தியாவில் பிரபலமாக உள்ள பேஸ்புக்கை மேலும் விரிவாக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் அப்போது தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது சக்கர்பர்க் இந்தியா வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி