சென்னை:-நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தபடாத வலிபர் சங்கம் பட வெற்றியை தொடர்ந்து, கையில் 5 படங்கள் வைத்திருக்கிறார். அதற்குள் தயாரிபாளர்களிடம், அந்த ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன், சாதாரண ஹோட்டல்களில் தங்கமாட்டேன், சம்பளம் இவ்வளவு தர வேண்டும் என்று கறாராக இருக்கிறார். சமீபகாலமாக இவர் கால்ஷீட்டை சொதப்புவதாகவும் பென்சில் உள்ளிட்ட பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, பத்திரிகையாளர்கள் ஏதாவது பேட்டி கேட்டாலோ, அல்லது அவரது பட சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி அறிய போன் செய்தால் கூட அவர்களை மதிப்பது கிடையாது. சுமார் 100 முறை போன் செய்தால் கூட அதற்கு ஒரு ரிப்ளே கூட கொடுப்பது கிடையாது. சினி பீல்ட்டில் வளர்ந்து வரும் ஒரு நடிகை இதுபோன்று நடப்பது நல்லதல்ல என்று பலரும் அறிவுரை செய்கின்றனர். ஆனால் அதையெல்லாம் அவர் காதில் வாங்கி கொள்வது கிடையாது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி