சென்னை:-இந்தி சினிமாவில் இருந்து வருவது போல் சமீபகாலமாக மல்டி ஹீரோ கதைகளில் நடிக்க இளவட்ட ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அது மட்டுமின்றி ஒரு நடிகர் நடிக்கும் படத்தை இன்னொரு இளவட்ட ஹீரோ தயாரிப்பது, மற்றொருவர் அந்த படத்தை வெளியிடுவது போன்ற வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஆரோக்யமான சூழ்நிலையில், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்காக நிதி ஒதுக்குவதற்காக விஷால், ஆர்யா, ஜெயம்ரவி, ஜீவா, கார்த்தி ஆகிய 5 நடிகர்களும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போகிறார்களாம். அதற்கான கதையும், இயக்குனரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம். ஆனால் அடுத்த ஆண்டு அந்த பட வேலைகள் தொடங்குகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி