சென்னை:-அஜீத்தைக்கொண்டு பெயரிடப்படாத படத்தை இயக்கி வரும் கெளதம்மேனனுக்கு ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கியுள்ளது. ஏற்கனவே அஜீத்தை சால்ட் அண்ட் பெப்பர், யூத் என இரண்டுவிதமான கெட்டப்பில் நடிக்க வைத்து வருகிறார். இந்த நேரத்தில் படத்தின் க்ளைமாக்ஸில் அஜீத்தை டோட்டலாக மாற்றிக்காட்ட வேண்டும் என்று நினைத்தவர் அதையும் தற்போது செயல்படுத்தி வருகிறார்.
அதனால், படத்தில் கடைசி 15 நிமிடங்களில் வரும் அஜீத்தின் உடல்கட்டை மாற்றியமைக்க நினைத்த கெளதம்மேனன், மறுபடியும் அவரை ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளுக்கு அனுப்பியதோடு, தாடியும் வளர்க்க வைத்து தற்போது படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறார். அதோடு கதைப்படி புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜீத்தை மேலும் சில கெட்டப்புகளில் வித்தியாசப்படுத்தி நடிக்க வைப்பது பற்றியும் விவாதம் நடத்தி வருகிறாராம் கெளதம்மேனன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி