அதையடுத்து அவரை நோக்கி கவர்ச்சி சம்பந்தமான கேள்விகள் பறந்தபோது, நடிகை என்று வந்த பிறகு அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. கதைக்கு ஏற்ப தேவையான கிளாமரை காண்பித்து நடித்தால்தான் சினிமாவில் நீடிக்க முடியும். இருப்பினும் நான் ஒரு அளவுகோல் வைத்துதான் நடித்து வருகிறேன் என்றார்.
அதையடுத்து, திருமணத்துக்கு முன்பே நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக செய்தி வெளியானதே? என்று கேட்போது, அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லீங்க. நீங்க வேற இப்படியெல்லாம்கேட்டு என்னை டென்சன் பண்ணாதீங்க என்று அந்த கேள்விக்கான பதிலை அத்தோடு கட் பண்ணிக்கொண்டார் ஸ்ருதிஹாசன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி