செய்திகள்,திரையுலகம் சூப்பர் ஸ்டாரின் மகனைப் பாராட்டும் நடிகர் கமல்ஹாசன்!…

சூப்பர் ஸ்டாரின் மகனைப் பாராட்டும் நடிகர் கமல்ஹாசன்!…

சூப்பர் ஸ்டாரின் மகனைப் பாராட்டும் நடிகர் கமல்ஹாசன்!… post thumbnail image
சென்னை:-மலையாளத் திரையுலகின் திறமையான நடிகர்களில் ஒருவரான மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார். சிறு வயதில் சில திரைப்படங்களில் நடித்த பிரணவ், நாயகனாகத்தான் அறிமுகமாவார் என மலையாளத் திரையுலகில் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் தற்போது உதவி இயக்குனராகப் பணிபுரிவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘பாபநாசம்’ படத்தில் பிரணவ் வேலை செய்யும் விதத்தைப் பார்த்து கமல்ஹாசன் மிகவும் பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரணவ்விடம் தனது இளமைக் கால ஆர்வத்தையும் திறமையையும் பார்க்க முடிகிறது என்று சொல்லியிருக்கிறார். ஒரு சிறந்த நடிகரின் மகனைப் போல அவர் படப்பிடிப்பில் நடந்து கொள்வதில்லையாம். மிகவும் பணிவுடனும், எளிமையுடனும், கடுமையாக வேலை செய்பவராகவும் இருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது, என்கிறார் கமல்ஹாசன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி