படத்தைத் தயாரித்துள்ள நிறுவனத்திற்கும், வினியோகஸ்தர்களுக்கும் முந்தைய படங்களின் கொடுக்கல் வாங்கலில் சில பிரச்சனைகள் இருக்கிறதாம். அவற்றை ஐ படத்தில் தீர்த்துக் கொண்டால்தான் முடியும் என வினியோகஸ்தர்கள் எதிர்பார்க்கிறார்களாம். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே அவர்கள் தயாரிக்கும் படங்களை மிகவும் காலதாமதத்துடனேயே ரிலீஸ் செய்கிறார்கள். வல்லினம், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்கள் முடிந்த பிறகும் அவற்றை மிகவும் தாமதமாகவே ரிலீஸ் செய்தார்கள்.
அவர்கள் தயாரித்துள்ள மற்றொரு படமான ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள பூலோகம் படம் முடிந்து பல மாதங்களாகியும் எப்போது வெளிவரும் என்பதும் தெரியவில்லை. கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் 2 படத்தையும் அதே நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. தயாரிப்பாளருக்கும் கமல்ஹாசனுக்கும் பிரச்சனை என்றெல்லாம் செய்திகள் வருகிறது. இப்போது ஐ படம் எப்போது வரும் என்பது சரியாகத் தெரியவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி