சென்னை:-ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட ஹிந்தி நடிகர்கள் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டனர். அப்போது சில பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஷாரூக்கான் மிகவும் மனம் விட்டுப் பேசினாராம். சொன்ன நேரத்தில் ஷாரூக் வராமல் போக அதனால் கோபமடைந்த பத்திரிகையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்க முடிவு செய்தனர்.
அதன் பின் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்திய ஷாரூக்கான் அவர்களிடம் எந்த பந்தாவும் இல்லாமல் சகஜமாக பேட்டியளித்திருக்கிறார். அப்போதுதான் ‘ஐ’ படத்தைப் பற்றிய அவரது பாராட்டுக்களையும் சொன்னார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. ‘ஐ’ படம் மிகவும் ஸ்டைலிஷாகவும், மிகவும் பிரம்மாண்டமாகவும் வியக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிலும், சிறந்த விதத்திலும் உள்ளது. ‘ஐ’ படத்தின் டிரைலரை நான் விரும்பி ரசித்தேன், எனவும் ஷாரூக் கான் கூறினாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி